சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின் கீழ் ராட்சத கழிவு நீர் குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அனைத்துவிதமான வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த பெருமழையால், அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீரால் உண்டான அழுத்தத்தால் குழாயில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், கிரீன் வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம், மந்தைவெளியில் இருந்து அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாலத்தில் 2 இடங்களில் ஏற்பட்டுள்ள விரிசலை விரைந்து சரிசெய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குனர் வினய்-க்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.