இந்தோனேசியாவில் எரிமலை வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்கிற எரிமலை மீது 75 மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டினர். இந்த சூழலில், இந்த எரிமலை நேற்று முன்தினம் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் சென்றிருந்திருந்த நிலையில், 46 பேர் பத்திரமாக கீழே இறங்கி விட்டனர். ஆனால், 29 பேரும் எரிமலையில் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இவர்களில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதேசமயம், 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வந்தனர். இந்த சூழலில், மேற்கண்ட 12 பேரும் பலியானது தெரியவந்திருக்கிறது. இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.