கூகுள் நிறுவனம் ஜெமினி (Gemini) என்று அழைக்கப்படும் அதன் சூப்பர் ஸ்மார்ட் ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜெமினியானது Open AI இன் GPT மாடல்களுடன் போட்டியிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சுவாரசியமாகக் கூகுள் ஜெமினியானது அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano) என மூன்று வெர்ஷன்களில் வருகிறது.
இந்த மூன்று வெர்ஷன்களும் எவ்வாறு வேறுபடும்? கூகுள் ஜெமினியை வைத்து என்னென்ன வேலைகளைச் செய்ய முடியும்? இது உண்மையிலேயே சாட்ஜிபிடி 4-ஐ காலி செய்யுமா? என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.
அல்ட்ரா, ப்ரோ, நானோ :
இந்த மூன்று வெர்ஷன்களுமே குறிப்பிட்ட விஷயங்களைத் திறமையாகச் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அல்ட்ராவானது சிக்கலான பணிகளைக் கையாளும் திறன் கொண்டது, ப்ரோவானது பல்வேறு வகையான வித்தியாசமான பணிகளைச் செய்யும் திறன் கொண்டது, நானோவானது உங்கள் டிவைஸ்க்கான பணிகளைச் செய்யும்.
கூகுள் ஜெமினியின் சிறப்பம்சங்கள் :
இது டெக்ஸ்ட் (Text), கோட் (Code), ஆடியோ (Audio), இமேஜஸ் (Images), வீடியோஸ் (Videos) என எல்லா வகையான விஷயங்களையும் புரிந்து கொள்ளும். எனவே தான் கூகுள் நிறுவனம் ஜெமினியை “மல்டி மாடல்” (Multi Model) என்று அழைக்கிறது.
மேலும் கூகுள் நிறுவனம் தனது ஜெமினியை, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் உலகின் ஒரு சூப்பர் ஹீரோ (Superhero in the AI world) என்றும் குறிப்பிடுகிறது, ஏனென்றால் இதனால் புகைப்படங்கள் மற்றும் ஒலியைப் புரிந்துகொள்வது முதல் சிக்கலான கணிதம் வரையிலான பல்வேறு பணிகளைச் செய்ய முடியும்.
90 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் மற்றும் நெறிமுறைகள் போன்ற 57 பாடங்களின் கலவையைப் பயன்படுத்தும் எம்எம்எல்யு-வில் மனித நிபுணர்களை விடச் சிறந்த மாடலாக, முதல் மாடலாக ஜெமினி அல்ட்ரா உள்ளது.
இதற்கு உலக அறிவு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகிய இரண்டுமே உள்ளது என்று கூகுள் கூறுகிறது. மேலும், இதனால் கோடிங் (Coding) எழுதவும் முடியும். கூகுள் ஜெமினியால் பைதான் (Python), ஜாவா (Java), சி++ (Java, C++) மற்றும் கோ (Go) போன்ற லேங்குவேஜ்களை புரிந்துகொள்ளும்.
கூகுள் நிறுவனம் டென்சர் ப்ராசசிங் யூனிட்ஸ் எனப்படும் ஸ்பெஷல் எஞ்சின்களை பயன்படுத்தி ஜெமினிக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் கிளவுட் டிபியு வி5பி என்று அழைக்கப்படும் புதிய எஞ்சினையும் அறிமுகம் செய்துள்ளது.
இது சூப்பர்-அட்வான்ஸ்டு ஏஐ-ஐ பயிற்றுவிப்பதற்கான மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும். சேர்ச் (Search), ஆட்ஸ் (Ads), க்ரோம் (Chrome), டூயட் (Duet) போன்றவைகளில் ஜெமினியை கொண்டு வருவதே கூகுளின் திட்டமாகும்.
கூகுள் ஜெமினி இப்போது இலவசமாக அணுக கிடைக்கிறது. இது கூகுள் பார்ட் (Bard) மற்றும் பிக்சல் ப்ரோ (Pixel Pro) மாடல்களில் அணுக கிடைக்கிறது. மறுகையில் உள்ள சாட்ஜிபிடி 4 ஆனது பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே அணுகக் கிடைக்கிறது.