மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில தேர்தல் வெற்றி விழா உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேற்கு மண்டல பாஜக சார்பில் நடைபெற்றது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி மேற்கு மண்டல பாஜக சார்பில்,குடவரை கல்வெட்டு கோவில் அருகே வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும்,பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.