சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும், வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுவிட்டது. சொல்ல முடியாத துயரங்களால் பலரும் இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், வேளச்சேரி பகுதியில் சத்தமின்றி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், வேளச்சேரி 5 பர்லாங்க் சாலை பெட்ரோல் நிலை அருகே கட்டுமான பணிக்காக குழிதோண்டும் பணி நடைபெற்ற நிலையில், திடீரென 50 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் அப்படியே இந்த பள்ளத்தில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், சுமார் 4 முதல் 8 பேர் வரை சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஒரு தரப்பினர் 4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும், அதில் இருவர் மீட்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இதனிடையே, மீட்புப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற திமுக ராகு காலப் புகழ் அமைச்சர் எ.வ. வேலுவை சூழ்ந்து கொண்ட உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நேற்று அல்ல, கடந்த மூன்று நாட்களாகச் சத்தமின்றி இந்த மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இன்றும் 4-வது நாளாக மீட்பு பணித் தொடர்கிறதே தவிர, சிக்கியவர்கள் யாரும் மீட்கப்படவில்லை.
இதனால், 6 ராட்சத மோட்டார்கள் மூலம் மழைவெள்ளம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் மட்டுமே மறைக்கப்பட்ட உண்மைகளும், தொழிலாளர்கள் முகமும் வெளி உலகத்திற்கு தெரிய வரும்.