தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள X பதிவில், நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக முனைவர் நா. பெலிக்ஸ் என்பவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நியமித்துள்ளார்.
ஆளுநர் – வேந்தர் திரு. ரவி அவர்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் புதிய துணை வேந்தராக முனைவர் நா. பெலிக்ஸ் அவர்களை நியமித்துள்ளார். pic.twitter.com/CbttaBhdTw
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 7, 2023