தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகளில், 2 ஆயிரத்து 858 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த சில வாரங்களாக, பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகளில், 2 ஆயிரத்து 858 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும், 2 ஆயிரத்து 92 ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதமும், ஆயிரத்து 828 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 2 ஆயிரத்து 453 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 3 ஆயிரத்து 929 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளன. 979 ஏரிகளில் போதிய அளவில் நீர் இல்லாமல் கிடக்கிறது.
குடிநீர் உள்ளிட்ட பயன்பாட்டுக்காக, 90 ஏரிகள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு 224.297 டிஎம்சி ஆகும். இந்த ஏரிகளில் தற்போது, 112.629 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.