தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் .சந்திரசேகர் ராவ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.அப்போது முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் நேற்று எர்ரவல்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.