குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 3.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 20 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. ராஜ்கோட் சுற்று வட்டாரப் பகுதியில், மிதமான அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
















