3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துடன் கூடுதலாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
வேளாண்மைத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு தற்போதுள்ள இலாகாவைத் தவிர, உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணை அமைச்சர் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜல் சக்தி துறை இணை பொறுப்பை கவனிப்பார். மத்திய இணை அமைச்சர் பார்தி பிரவின் பவார் பழங்குடியினர் நலத்துறையை கவனிப்பார் எனத் தெரிவிக்கவிக்கப்பட்டுள்ளது.