கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இன்று காலை 6.52 மணிக்கு, 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இன்று காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:3.1, Occurred on 08-12-2023, 06:52:21 IST, Lat: 16.77 & Long: 75.87, Depth: 10 Km ,Location: Vijayapura, Karnataka, India for more information Download the BhooKamp App https://t.co/sO7eZP7n4q@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @KirenRijiju pic.twitter.com/B7Wx7R3GKY
— National Center for Seismology (@NCS_Earthquake) December 8, 2023
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. விஜயபுரா சுற்று வட்டாரப் பகுதியில், லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நில அதிர்வு பற்றிய தகவல் தெரியவந்ததும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து அச்சமடைய வேண்டாம் என்று கூறினார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.