சென்னை அம்பத்தூரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அண்ணாமலை ,
மிக்ஜாம் புயலில் அம்பத்தூர் தொழிற்சாலையில் 3000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இருக்கின்றனர்.
தொழில் நிறுவனர்கள் மத்திய அரசுக்கு 4 கோரிக்கை வைத்திருப்பதாகவும் பல்வேறு தொழிற்சாலைகள் கடன் மூலம் இயங்குவதாகவும் இதிலிருந்து மீண்டு வருவதற்கு பொருளாதார ரீதியான தற்காலிகமான ஏற்பாடு கேட்பதாக தெரிவித்தார்.
அதாவது இயந்திரங்கள் அனைத்தும் பழுதடைந்து இருப்பதாகவும், இதனால் சப்ளை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக காப்பீட்டு தொகை வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளிவரும் நீரால் அவ்வபோதும் தொழிற்சாலைக்குள் வருவதாக பல்வேறு பாதிப்பு ஏற்படுவதாகவும் இதற்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் இந்த கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் எனவும் மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அவை செய்து தரப்படும் எனத் தெரிவித்தார்.
நாளை தமிழகம் வரவிருக்கும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம், இவர்களது கோரிக்கை மனுக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மாநில அரசு இந்தப் பகுதியை மறந்துவிட்டதாகவும் முக்கியமான அமைச்சர்கள் தொழில்துறை அமைச்சர் இந்த பகுதிக்கு ஏன் வந்து ஆய்வு செய்யவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த பகுதியில் மட்டும் மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
அம்பத்தூர் தொழிற்சாலை பகுதியிலுள்ள ஏரியில் நீர்வழிப் பாதை அடைக்கப்பட்டு இருப்பதாகவும் அதனை ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து அந்த நீரினை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் அணுகி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
80% அளவிற்கு நிவாரண மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக தலைமைச் செயலாளர் கூறியது தவறு. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை வெளிப்புறத்தில் அதாவது செங்கல்பட்டு போன்ற இடங்களில் இடுப்பிற்கு கீழ் நீர் இருப்பதாகவும் களத்தில் வராமல் சென்னைக்கு மையப்பகுதியில் இரண்டு மூன்று இடத்தில் பார்வையிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியதாக கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
களத்திலே இல்லாதவர் இதுபோன்ற சொல்வது சரியா களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.