மிக்ஜம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
மிக்ஜம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தமிழக பாஜக சார்பாக தொழில் முனைவோர்களை இன்று சந்தித்தோம். 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிவரும் சென்னையின் தொழிற்துறை மையமாக விளங்கும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரியாக இரண்டு மாதங்கள் வரை ஆகும் என கூறப்படும் நிலையில் இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது.
கடன் வாங்கி தொழில் செய்து வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறியதோடு, தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். நாளை தமிழகம் வரவிருக்கும் மத்திய இணை அமைச்சர் திரு @Rajeev_GoI அவர்களிடம், கோரிக்கை மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். (2/2) pic.twitter.com/2vObN4aX7X
— K.Annamalai (@annamalai_k) December 8, 2023
கடன் வாங்கி தொழில் செய்து வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறியதோடு, தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். நாளை தமிழகம் வரவிருக்கும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம், கோரிக்கை மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.