2 நாட்களில் 3 மாநில பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிப்பு: முரளிதர ராவ்!
Mar 15, 2026, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 நாட்களில் 3 மாநில பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிப்பு: முரளிதர ராவ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்னும் 2 நாட்களில் 3 மாநிலங்களுக்கான பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோராமில் சோரம் மக்கள் இயக்கமும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றன. இதையடுத்து, தெலங்கானாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும், மிசோராமில் சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டு ஹோமாவும் முதல்வர்களாகப் பதவியேற்று விட்டார்கள். இவர்களுடன் அமைச்சர்களும் பதவியேற்றிருக்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க. வெற்றிபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் இன்னும் முதல்வர்கள் பதவியேற்கவில்லை. இம்மாநிலங்களில் ஏற்கெனவே முதல்வர்களாக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே சிந்தியா, ராமன் சிங் ஆகியோருக்கு பதிலாக புதுமுகங்களை முதல்வர்களாக நியமிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருக்கிறதாம். இதுதான் தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, 3 மாநிலங்களுக்கும் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய குழு ஒன்றையும் பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது. இக்குழுவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இக்குழுவினர் 3 பேரும் மேற்கண்ட 3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்னும் 2 நாட்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களுக்கான முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முரளிதர ராவ் கூறுகையில், “3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுவால், மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு தங்களது குழு உறுப்பினர்களுடன் சென்று, நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வார்கள். இப்பணி இன்னும் 2 நாட்களில் நிறைவடைந்து விடும். ஆகவே, 2 நாட்களில் 3 மாநிலங்களுக்கான முதல்வர்களை பா.ஜ.க. தலைமை அறிவிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: 3 state CMs2 daysMuralidar rao
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7%: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஜப்பானை வீழ்த்தியது இலங்கை!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies