தானியக்கிடங்காக மாறிய கமலாலயம்!
Jul 29, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தானியக்கிடங்காக மாறிய கமலாலயம்!

- பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல், திமுகவின் அறிவாலயமும், அதிமுகவின் ராயப்பேட்டை அலுவலகமும், கம்யூனிஸ்ட்களின் அலுவலகங்களும், காங்கிரசின் சத்தியமூர்த்து பவனும் வெறிச்சோடி கிடக்கின்றன எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

சென்னையில் 2023 டிசம்பர் 2, 3 தேதிகளில் சற்று கணமழையும் காற்றும் வீசியது! புயல் என்பது கடலுக்குள்தான்! சென்னை நகரில் எந்த வீடும் வீட்டின் கூரையும் புயலால் சேதமடையவில்லை! எனவே சென்னையில் புயலல்ல காற்றுதான்! மழையும் 2015 ம் ஆண்டைவிட அதிகமில்லை! ஏறத்தாள 2015 விட 10 சென்றிமீட்டர் குறைவுதான்!

நிபுணர்கள் போட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு தந்த நிதி 4397 கோடியையும், தமிழக அரசு ஒதுக்கிய 4000 கோடியையும், மீண்டும் மத்திய அரசு கொடுத்த 450 கோடியையும் தங்களுக்குள்ளே பங்குவைத்து பிரித்துக்கொண்ட திமுகவினர், வெள்ளப்பெருக்கை தடுக்க எந்த பணியையும் செய்யவில்லை! அதன்காரணமாக சென்னை நகரில் 10 லட்சம் கோடியையும் தாண்டிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது!

ஒரு தினக்கூலி தொழிலாளி வெள்ளத்தில் மூழ்கிய தனது இரு சக்கர வாகனத்தை பழுதுபார்க்க ரூ. 200 முதல் 600 வரை ஆகலாம்! அவனால் ஒருவாரம் வேலைக்கு செல்ல முடியவில்லை அதனால் இழப்பு ஏறத்தாள 3000! அம்பத்தூர் எஸ்டேட்டில் ஒரு எந்திரம் பயனற்றதாக கெட்டுப்போய் விட்டதென்றால் ஒரு கோடி ரூபாய் இழப்பு!

இந்த வகையில் கணக்கிட்டால் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை நகரில் மொத்த இழப்பீட்டை கணக்கிடவே முடியாது! இந்த இழப்புகளுக்கு ஒவ்வொரு திமுக காரணும் திமுகவுக்கு வாக்களித்தவர்களும்தான் பொறுப்பு! என்ன செய்வது நம் தலைவிதியைத்தான் நாம் அனுபவிக்கிறோம்!

இந்த துயரத்திற்குப்பிறகும் மத்திய அரசு 450 கோடியும், 561.29 கோடியையும் வழங்கியுள்ளது! ஒரு விஷமுள்ள கொடுக்குப்பூச்சி தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுக் கொண்டிருந்தது!

அதை கவனித்த ஒரு சாமியார் அதை காப்பாற்ற தண்ணீரில் கையை விட்டு தூக்கினார்! பூச்சி அவரை கையில் கொட்டியது! வலியின் காரணமாக சாமியார் கையை அசைத்ததால் பூச்சி மீண்டும் தண்ணீரில் விழுந்துவிட்டது! சாமியார் மீண்டும் காப்பாற்றினார் பூச்சி மீண்டும் கடித்தது! அதுதான் மீண்டும் மீண்டும் கடிக்கிறதே நீங்கள் ஏன் அந்த பூச்சியை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறீர்கள்? என்று அருகில் இருந்தவர் கேட்டபோது, உதவ வேண்டியது என் கடமையாயிற்றே அதனால்தான் அது கடித்தாலும் நான் உதவுகிறேன்! என்றாராம் சாமியார்!

பூச்சி உதவியவரையே கொட்டியதுபோல திமுக அரசு மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதுடன் நிதியையும் கையாடல் செய்தாலும், மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மீண்டும் தமிழகத்திற்கு ஒரு 450 கோடியையும் 561.29 கோடியையும் வழங்கியுள்ளது!

பேரிடர் மேலாண்மைக்காக வெள்ளத்தடுப்புக்காக ஒதுக்கிய நிதியில்கூட கையாடல் செய்து மக்களை துயரத்தில் ஆழ்த்தி, பல லட்சம் கோடிக்கு இழப்பை ஏற்படுத்திய திமுக ஒரு பிஸ்கட் கூட பொதுமக்களுக்கு தரவில்லை!

சென்னையில் 200 உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்!, 27 எம்.எல்.எ கள், 3 எம்.பி கள் யாரும் ஒரு பன் பாக்கட்கூட வினியோகிக்கவில்லை! திமுகவினர் வந்து பார்க்கவே இல்லை!

அதிமுக வினரும் வந்து பார்க்கவில்லை! அதிமுகவின் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் ஒருநாள் ஒரு நிக்கரையும் பனியனையும் போட்டுக்கொண்டு ஜாலியாக தண்ணீரில் நடந்ததை பார்க்க முடிந்தது! வேறு யாரும் வரவில்லை! சென்னையில் பிரதான எதிர்கட்சி அதிமுகதான்! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எந்த கட்சியுமே எட்டிப்பார்க்கவில்லை!

பாஜக அலுவலகம் கமலாலயம் மட்டும் டிசம்பர் 4 ம் தேதிமுதல் 9 ம் தேதி இன்றுவரை (இன்னும் எத்தனை நாள் தொடரும் என சொல்ல முடியாது,) தானியங்களின் குடோனாக காட்சியளிக்கிறது! மழையால் பாதிக்கப்படாத தமிழக மாவட்டங்களில் இருந்து இதுவரை 75 லாரிகளில் அரிசி பருப்பு தானியங்களும், பிஸ்கட், பிரட், தண்ணீர் கேன், பால் பாக்கட் என கொண்டுவந்து குவித்துள்ளனர் அந்தந்த மாவட்டபாஜகவினர்!

வந்து குவிந்துள்ளது இன்னும் வந்துக்கொண்டிருக்கிறது! இங்கிருந்து கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்து சென்றவண்ணமாக உள்ளனர்!

கமலாலயம் இருக்கும் தெருவான வைத்திய ராமன் தெருவில் லாரிகள் சரக்குகளோடு வருவதும் செல்வதுமாக உள்ளது! பாஜகவினர் மட்டுமே மக்களுக்கு உதவி வருகிறார்கள்!

திமுகவின் அறிவாலயமும், அதிமுகவின் ராயப்பேட்டை அலுவலகமும், கம்யூனிஸ்ட்களின் அலுவலகங்களும், காங்கிரசின் சத்தியமூர்த்து பவனும் வெறிச்சோடி கிடக்கின்றன! யாரும் ஒரு சிறு உதவியைக்கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யவில்லை! பாஜகவினரும் சேவாபாரதி என்னும் சங்கத்தின் சேவை அமைப்பும் மட்டும்தான் மக்களுக்கு உதவி வருகிறது!

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சினரிடையே பாஜகவினருக்கு மட்டும்தான் சேவை செய்யும் எண்ணம் உள்ளது என்னும் உண்மையை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்வாக இந்த சேவை நிகழ்வு அமைந்துள்ளது! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: kumari krishnan articledmk fails
ShareTweetSendShare
Previous Post

புயல் தாக்கிய 3 நாட்களில் 3500 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

Next Post

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7%: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

கிங்டம் திரைப்படம் ரஜினியின் படங்கள் போல இருக்கும் : விஜய் தேவரகொண்டா

பயோமெட்ரிக் மூலம் பணப்பரிவர்த்தனை – விரைவில் அமல்!

மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டம் : எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு!

பிரளய் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? – உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

சென்னை : வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞர்!

பொள்ளாச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் : பேக்கரி கடை உரிமையாளரை கட்டி வைத்து தாக்கிய உறவினர்கள்!

தலைவன் தலைவி திரைப்படம் 30 கோடி வசூல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies