கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ – அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் டிபோரா – செரில் சினென் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அசாம் மாநிலத்தில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ – அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் டிபோரா – செரில் சினென் ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் தனிஷா – அஸ்வினி ஜோடி 21-12, 21-12 என்ற நேர்செட்டில் டிபோரா – செரில் சினென் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.