வேலூரில் ஸ்ரீ நாரயணீ சக்தி பீடம் அரங்கத்தில் மகளிர் சக்தி சங்கமம் டிசம்பர் 10 ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள சாரதா ஆஸ்ரமத்தின் சுவாமினி கிருஷ்ண ப்ரியம்பா அவர்களின் “பாரத வளர்ச்சியில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பிலான ஆசியுரையுடன் நடைபெற்றது .
காலை 10.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி வைத்தனர். சுபிக்ஷம் அறக்கட்டளையின் அறங்காவலரான வழக்கறிஞர் சசிகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
“மகளிர் சக்தி சங்கமம்” நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி திருமதி கோமதி நவீன் விளக்கி பேசினார்கள்।
பாரத கண்ணோட்டத்தில் பெண்மை பற்றி வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் திருமதி கார்த்தியாயினி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்கள்.
சமுதாய மாற்றத்திற்கான நம் ஐந்து கடமைகள் பற்றி அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி விஷயங்களை திரு.புவன்ராஜ் குமார் எடுத்துரைத்தார்கள். விழா நிறைவில் திருமதி உமா,அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் .
சிறப்பாக நடைபெற்ற இந்த மகளிர் சக்தி சங்கமத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .