பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் வொரெயால் தமிழ் கலாச்சார மன்றம் சார்பில், செர்ஜி நகரில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தி சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
பிரான்சில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் தமிழில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
“பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன” என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.