நமது தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் பாரதப் பிரதமர் மோடி பரப்பியுள்ளார் எனத் தமிழக பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூலை மாதம் தமது பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், கடந்த ஜூலை மாதம் தமது பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.
இன்று, நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், நமது தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்புக்கும்,… https://t.co/Yf2KucbJxw
— K.Annamalai (@annamalai_k) December 10, 2023
இன்று, நமது பிரதமர் மோடி, நமது தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்புக்கும், திருக்குறளின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கும், பணிகளுக்கும் சான்றாக, செர்ஜி நகரில் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கிறது.
நமது தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் பரப்பியுள்ள பாரதப் பிரதமர்
மோடிக்கு தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.