ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370)ரத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக எந்த அரசியல் தலைவரும் வீட்டு காவலில் வைக்கப்படவில்லை என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மறுப்பு தெரிவித்தார்.
இது முற்றிலும் ஆதாரமற்ற செய்தி என்றும் அவர் கூறினார். யாரும் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்றும், எந்த தலைவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.