176 பைகளில்ல் கட்டுக்கட்டாக பணம்,
40 கவுன்டிங் மெசின்,
கரன்சி நோட்டுக்களை எண்ண 100 அதிகாரிகள்
இது ஏதோ சினிமாவில் வரும் காட்சியல்ல.
காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான பணம் தான் இவை அணைத்தும். என்ன பிரமிப்பாக உள்ளதா?
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வருமானவரித்துறையினர் சரியான சவுக்கடி கொடுத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய ஐடி சோதனை டிசம்பர் 11 ஆம் தேதி 6வது நாளை எட்டியுள்ளது. சுமார் 300 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு குழுவிற்கும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் எதிராக நாட்டிலேயே எந்த ஒரு நிறுவனமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பணம் கைப்பற்றப்பட்டதாக ஐடி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்டமாக, 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வங்கி ஊழியர்களுடன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பணம் எண்ணும் பணி தாமதம் ஆனதால் தற்போது 100 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 40 பணம் கவுன்டி மெசின் மூலம் பணம் எண்ணப்பட்டு வருகிறது.