பிரதமர் மோடியின் வெற்றிகரமான தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நிர்வாகம் வளர்ச்சி பெறும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்றும் மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து த்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் பதிவில்,
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் “ஒரே நாடு, ஒரே கொடி” என்ற தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் வகையில், நமது பிரதமர் நரேந்திர மோடி 2019 இல் #Article370-ஐ ரத்து செய்ய ஒரு வரலாற்று முடிவை எடுத்தது,
माननीय उच्चतम न्यायालय द्वारा धारा 370 और 35 A के संबंध में दिया गया निर्णय अभिनंदनीय है। यह 'एक भारत-श्रेष्ठ भारत' की भावना को मजबूती प्रदान करने वाला है।
'राष्ट्र प्रथम' की भावना के साथ आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में जम्मू- कश्मीर को देश की मुख्यधारा…
— Yogi Adityanath (@myogiadityanath) December 11, 2023
பிரிவு 370 மற்றும் 35 ஏ தொடர்பாக மாண்புமிகு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது. இது ”ஒரே இந்தியா’ என்ற உணர்வை வலுப்படுத்தப் போகிறது.
‘தேசம் முதலில்’ என்ற உணர்வோடு மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி
ஜம்மு காஷ்மீரை நாட்டின் முக்கிய நீரோட்டத்துடன் இணைப்பதில் ஜி அவர்களின் தலைமையில் ஆற்றிய வரலாற்றுப் பணிகளுக்கு 25 கோடி மாநில மக்களின் சார்பில் மீண்டும் மனமார்ந்த நன்றி!
நிச்சயமாக, பிரதமரின் வெற்றிகரமான தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் நல்ல நிர்வாகம், வளர்ச்சி மற்றும் செழுமைக்கான புதிய தரங்களை அமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.