ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!
Apr 29, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6-வது முறையாக இன்று சம்மன் அனுப்பி இருக்கிறது.

ஜார்க்கண்ட் முதல்வராக இருப்பவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன். முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மகனான இவர், 2019-ம் ஆண்டு மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். முதல்வராக இருக்கும் இவரே, சுரங்கத் துறையையும் தனது வசம் வைத்திருக்கிறார்.

அந்த வகையில், தனது உதவியாளருக்கு முறைகேடாக சுரங்கம் ஒதுக்கியது, அதன் மூலம் பண மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹேமந்த் சோரன் மீது எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, சமூகநலத்துறை இயக்குநராகவும், ராஞ்சியின் ஆணையராகவும் பணியாற்றிய சாவி ராஜன் உட்பட 14 பேரை கைது செய்திருக்கிறது.

அதேசமயம், சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரனிடம் கடந்த ஆண்டு நவம்பா் 17-ம் தேதி அமலாக்கத் துறை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதன் பிறகு, இராணுவ நில முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.

இதையடுத்து, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடா்பாக விசாரிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து, ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகக் கோரி 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதேசமயம், அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு  தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகுமாறு கோரி 6-வது முறையாக ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

Tags: Jharkhand CMEnforcement DirectoratesummonedHemant Soran
ShareTweetSendShare
Previous Post

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Next Post

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies