ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய இரண்டாம் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
19 வயத்துக்குட்பட்டோர்கான 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இன்றைய நாளில் மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
அதன் இரண்டாம் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
இந்திய அணி வீரர்கள் :
அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன், ஆரவெல்லி அவனிஷ் ராவ் , சௌமி குமார் பாண்டே , முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் , தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
நேபாளம் அணி வீரர்கள் :
அர்ஜுன் குமால் , பிபின் ராவல், தீபக் போஹாரா, தேவ் கானல், உத்தம் மகர், ஆகாஷ் திரிபாதி, குல்சன் ஜா, திபேஷ் கண்டேல், சுபாஷ் பண்டாரி, ஹேமந்த் தாமி, ஆகாஷ் சந்த், திலக் பண்டாரி, தீபக் தும்ரே, பிஷால் பிக்ரம் கே.சி , தீபக் போஹாரா.