ஜப்பானின் ஹொக்காய்டோ (Hokkaido) தீவு பகுதியில் உள்ள ஹகோடேட் (Hakodate) கடல் பகுதியில், திடீரென இலட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு ஜப்பானின் ஹகோடேட் தீவு பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சொல்கின்றனர்.
இந்த நிலையில், இங்குள்ள கடற்கரையில் திடீரென இலட்சக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனை அறிந்த உள்ளூர் மக்கள் இறந்த மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், இறந்து கரை ஒதுங்கிய மீன்களை விற்க வேண்டாம் என்று உள்ளூர் மக்களை எச்சரித்தனர். நேரம் செல்ல செல்ல இலட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
இவ்வளவு மீன்கள் திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்து ஆய்வுக்காக இறந்த மீன்களின் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். புகுஷிமா அணு உலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலந்ததால், மீன்கள் இறந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகப்படுகின்றனர்.