சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 170 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தலைப்பு பற்றி தகவல்கள் பரவி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவர் தற்பொழுது நடித்துவரும் தனது 170வது திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
“ஜெய் பீம்” திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கிவரும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக உள்ள நிலையில் தலைவர் 170 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பெயர் என்னவாக இருக்கும் என்பது குறித்து யுகங்கள் தற்பொழுது இணையத்தில் எழுந்துள்ளது.
படத்தின் டைட்டில் “V” என்ற எழுத்தில் தொடங்குவதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பெயர் “A” என்ற எழுத்தில் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.
பல ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு “வேட்டையன்” என்று பெயர் வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர், மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பெயர் “அர்ஜுனன்” என்று இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.