உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகளில் மந்த நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உத்தரமேரூர் பேரூராட்சியில் பணியாளர் கூறியதாவது :
பல ஆண்டுகளாக உத்தரமேரூரைப் பூர்விகமாகக் கொண்டவர்களே பேரூராட்சி நிர்வாகத்தில் முக்கிய அதிகாரப் பொறுப்புகளில் பணியில் உள்ளனர்.
இரு அலுவலக உதவியாளர்கள், வரித்தண்டலர், தூய்மை பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பேரூராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். புதிதாக அலுவலர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், நிர்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார். கூறினார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரடி விசாரணை மேற்கொண்டு காலியாக உள்ள உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.