ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி குளிர்கால பிந்தைய கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டது.
மூன்று நாட்கள் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை ஆகியவற்றின் கால்தடம், நக கீறல்கள், விலங்குகளின் எச்சங்கள் ஆகியவற்றை வைத்து கணக்கு எடுக்கும் பணியும், மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதையில் காட்டு யானை, மான், பறவை, தாவர இனங்கள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெறும். இறுதியாக கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் அது தொடர்பான அறிக்கை தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.
இந்த நிலையில், பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட நவமலை பகுதியில் வனவர், வனக்காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.