ஐபிஎல் 2024 ஏலத்தில் இடம் பிடித்துள்ள 333 வீரர்களில், மூன்று இந்தியர்கள் மட்டுமே ரூ.2 கோடி மதிப்பில் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்கான இல்லத்தில் உள்ள வீரர்கள் பட்டியல் வெளியிப்பட்டுள்ளது. மொத்தமாக 333 வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.
டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் இந்திய வீரர்களின் பெயர்கள் மட்டுமே அதிகபட்ச தொகையான ரூ. 2 கோடிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்த அதிகபட்ச தொகையான ரூ.1.5 கோடிக்கும், ரூ.1 கோடிக்கும் எந்த ஒரு இந்திய வீரர்களின் பெயரும் இல்லை. அதற்கு அடுத்தபடியாக உள்ள ரூ.50 லட்சம் பெயர் பட்டியலில் தான் இந்திய வீரர்களின் பெயர்கள் உள்ளன.
ரூ.2 கோடி – இந்திய வீரர்கள் :
1. ஹர்ஷல் படேல்
2. ஷர்துல் தாக்கூர்
3. உமேஷ் யாதவ்
ஹர்சல் படேல் , ஷர்துல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ரூ.2 கோடி பட்டியலில் உள்ளனர். ஓரிரு சீசன்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் விடுவிக்கப்பட்டார்.
மறுபுறம், ஷர்துல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ், ஐபிஎல் 2023 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினர். ஆனால் இருவரும் இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர்.
ரூ.50 லட்சம் – இந்திய வீரர்கள் :
மனீஷ் பாண்டே , ஜெய்தேவ் உனட்கட் , கருண் நாயர் , சிவம் மாவி உட்பட இந்த பட்டியலில் மொத்தமாக 11 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
1.மணீஷ் பாண்டே
2.கருண் நாயர்
3.ஜெய்தேவ் உனத்கட்
4.சேத்தன் சகாரியா
5.சிவம் மாவி
6.கேஎஸ் பாரத்
7.சந்தீப் வாரியர்
பரிந்தர் ஸ்ரான்
சித்தார்த் கவுல்
வருண் ஆரோன்
ஹனுமா விஹாரி
ஆகியோர் ரூ.50 லட்சம் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.