சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில ஊடகப்பிரிவு நிர்வாகிகள், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழக பாஜக ஊடகப் பிரிவு சார்ந்த பணிகள், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிர்கொள்வதை பற்றி விரிவாக பேசினார்.
மத்திய அரசு திட்டங்கள் மக்களிடையே கொண்டு செல்வது, கட்சியின் நிகழ்ச்சிகளை கடைக்கோடி தொண்டனுக்கும், கிராமத்தில் இருக்கும் மக்களுக்கும் எடுத்துச் செல்வதைப் பற்றி பேசினார். கட்சியின் வளர்ச்சி, ஊடகப்பிரிவு பங்கு, அதன் முக்கியத்துவம் குறித்து உரையாடினார்.
இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் வி.பி. துரைசாமி, நாராயண திருப்பதி, எம். சக்கரவர்த்தி, கரு. நாகராஜன் மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.