அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதல் குறித்து விரைவில் தெரியவரும் என எஃப்பிஐ தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். புது டெல்லியில் நேற்று தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் தினகர் குப்தாவை எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே சந்தித்தார்.
இந்த சந்திப்பில் “அமெரிக்காவில் பரவி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் சிண்டிகேட் உறுப்பினர்களுடன் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதக் கூறுகளுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு உள்ளது என்பதை NIA தலைவர் எடுத்துரைத்தார்” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீதான தாக்குதலை அமெரிக்கா “ஆக்ரோஷமாக” விசாரித்து வருவதாகவும், விரைவில் “நம்பகமான” தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார்.