நியூசிலாந்தில் 580 ஆண்டுகளுக்கு ஒருமுறை 92 அடி உயரத்தில் சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அதில் நியூசிலாந்தில் சுனாமி 580 ஆண்டுகளுக்கு ஒருமுறை 92 அடி உயரத்தில் சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டது.
மேலும் 92 அடி (28 மீட்டர்) உயரமுள்ள சுனாமி அலைகள் நியூசிலாந்தின் சில பகுதிகளை மிக மோசமான நிலநடுக்க சூழ்நிலையில் தாக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
மேலும் இதை ஆய்வில், நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு தீவுகளுக்கு ஏற்படக்கூடிய சுனாமி மற்றும் பூகம்பம் அபாயதை கட்டுப்படுத்த, பூகம்பங்களை ஆய்வு செய்யும் புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். இதில் வடக்கு தீவின் வடகிழக்கு கடற்கரையில் மிகப்பெரிய அலைகள் தாக்க வாய்ப்புள்ளது என்று கண்டறிந்தனர்.
பெரியளவில் சுனாமியை உருவாக்கும் பூகம்பங்களை உருவாக்கக்கூடிய துணை மண்டலங்களுக்கு, நியூசிலாந்து அருகாமையில் இருப்பதால், இந்த பேரழிவு அலைகளின் அபாயத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்று வெலிங்டனின் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளரான மூத்த எழுத்தாளர் மார்த்தா சாவேஜ் லைவ் சயின்ஸ் கூறினார்.