சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு, 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 170 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. லேசாக வீடுகள் குலுங்கியதால், மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.