நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இரண்டு மர்மநபர்கள் அவைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவையின் மையத்திற்கு அத்துமீறி நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த மர்ம நபர்கள் கோஷங்களை எழுப்பியவாறு தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவை 2 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவில்லை என்றாலும், காலிஸ்தானி பிரிவினைவாதிகள், சீக்கியர்களின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தை டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் தாக்குவோம் என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.