பாரத் நெட்டின் கீழ் நாட்டில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பை அரசு வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் மூலம் ஆப்டிகல் ஃபைபர் அமைக்கப்படுகிறது. இன்னும் இந்த சேவை கிடைக்காத கிராமப்புறங்களில் 4ஜி சேவையை வழங்க அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
பாரத் நெட்டின் கீழ் நாட்டில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பை அரசு வழங்கியுள்ளது.
இதுவரை 4ஜி இணைப்பு இல்லாத 40 ஆயிரம் கிராமங்களுக்கு 4ஜி டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.