தனது பிறந்த நாளைக்கு வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றி கூறி சமூக வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நேற்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளில், அவர் நடித்துவரும் 170வது படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது. அப்படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டது.
ரஜினி நடித்த படையப்பா படத்தில் வரும் ‘வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்ட போகல ‘இந்த வசனத்தைப் போலவே அந்த தலைப்பு டீசரில் அவரின் தோற்றம் அமைந்தது. இப்படி ஸ்டைலுக்கு பெயர் பெற்ற அவருக்கு இன்றளவும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளிற்குப் பல ரசிகர்களும், பல திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கு நன்றி தெரிவித்து ரஜினி தனது எக்ஸ் பதிவில்,
தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த திரை பிரபலங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், விளையாட்டுத் துறை நண்பர்களுக்கும், தொழிலதிபர்களுக்கு, அனைத்து துறை நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், தன்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ” பொழுதைப் போக்கும் ! வறுமையை நீக்கும் ! உடலினை காக்கும் ”
” உழைத்திடுவோம், மகிழ்ந்திடுவோம் ” என்று பதிவிட்டுள்ளார்.