வால்மார்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியதை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தனது எக்ஸ் பக்கத்தில் நீல நிற சைக்கிளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்! ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகள் வால்மார்ட் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Make in India, Make for the World!
Delighted to witness the launch of Walmart 🇺🇸 first made in 🇮🇳 bicycles, manufactured by #HeroCycles #Ludhiana. pic.twitter.com/DMYVpt46DF
— Taranjit Singh Sandhu (@SandhuTaranjitS) December 12, 2023
வால்மார்ட் , இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மிதிவண்டிகள் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி அமெரிக்க சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு வரும் என்று அறிவித்தது.
2027 ஆம் ஆண்டிற்குள் 10 பில்லியன் டாலர் ஏற்றுமதியை மூன்று மடங்காக உயர்த்த வால்மார்ட்டின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
இந்தியாவின் மிதிவண்டி உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹீரோ ஈகோடெக், வால்மார்ட்டிற்காக “க்ரூஸர்-ஸ்டைல்” சைக்கிளை வடிவமைத்துள்ளது, இது கான்கார்ட் பிராண்டுடன் பெரிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஓட்டும் வகையில் கிடைக்கிறது.
வால்மார்ட் யுஎஸ் ஸ்டோர்களில் விற்கப்படும் க்ரூஸர்கள் இந்தியாவில் இருந்து பெறப்பட்ட 90% மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
இதுகுறித்து வால்மார்ட்டின் நிர்வாக துணைத் தலைவர் சோர்ஸிங் பிரிவு ஆண்ட்ரியா ஆல்பிரைட் கூறுகையில், “வால்மார்ட் வாடிக்கையாளர்களின் தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரிப்பதற்கு இந்தியா நல்ல நிலையில் உள்ளது, மேலும் Hero Ecotech உடனான எங்கள் பார்ட்னர்ஷிப் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பார்ட்னர்ஷிப் எங்களின் உலகளாவிய நெகிழ்ச்சித்தன்மையை வலுப்படுத்துவதுடன், எங்கள் பணியை மேலும் மேம்படுத்துகிறது.
வால்மார்ட் 2019 ஆம் ஆண்டில் Walmart Vriddhi initiative-ஐ அறிமுகப்படுத்தியது, இது சுமார் 50,000 MSME களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருப்பங்களை நவீனமயமாக்கவும், அளவிடவும் மற்றும் அடையவும் உதவுவதன் மூலம் மேக் இன் இந்தியா முயற்சிக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.