விருதுநகரில் உள்ள பிரபல தனியார் மெட்ரிக் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார் குழந்தை ஒருவர். அப்பா, அம்மாவைப் பிரிந்து, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார் அந்தச் சிறுமி.
வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார் அந்த சிறுமி. அப்போது, தனது பேத்தியை குளிப்பாட்டியுள்ளார்.
அப்போது, அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து துடிதுடித்துப்போன பாட்டி, பேத்திடம் விசாரித்தபோது, கண்ணாடி போட்ட கணக்கு ஆசிரியர் பெரியசாமி சார்தான் காரணம் என, தனக்கு பள்ளி கழிவறையில் நடந்த கொடுமையைத் தெரிவித்துள்ளார்.
இரத்த கண்ணீர் வடித்த பாட்டி, துடிதுடித்துப்போய் இது குறித்து அந்த பள்ளியின் முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
பின்னர், டாக்டர் ஒருவரிடம் அழைத்து சென்று சிறுமிக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அந்த டாக்டர் அறிவுரையின்படி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டாள்.
இது தொடர்பாக, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்குப்பதிவு செய்த போலீசார், கணித ஆசிரியர் பெரியசாமியை போக்சோ கைது செய்தனர்.