நாடாளுமன்றத்தல் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவையில் நேற்று பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியே புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய பெண் உட்பட இருவா் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 5 பேரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகர் சர்மா உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவன். இவரின் தந்தை தச்சு தொழிலாளி. வறுமை காரணமாக 12 வகுப்போடு படிப்பை நிறுத்தி அவர், தற்போது லக்னோவில் ஆட்டோ ஓட்டி வருகிறான்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் மலப்புரா கிராமத்தை சேர்ந்த மனோரஞ்சன் தேவாராஜேகவுடா பொறியியல் பட்டதாரி. தந்தையின் விவசாய பணிகளை கவனித்து வருகிறான்.
37 வயதா நீலம் சிங்,ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். எம்பில் முடித்துள்ள இவர், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். 25 வயதான அமோல் தன்ராஜ் ஷிண்டே மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவன்.
12ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், ராணுவம் மற்றும் போலீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த லலித் ஜா, ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.