சிக்கிமில் கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சிக்கித் தவித்த 800க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டுள்ளது.
கிழக்கு சிக்கிமின் உயரமான பகுதிகளில் நேற்று முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்ததைத் தொடர்ந்து, திரிசக்தி கார்ப்ஸ் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டனர்.
பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு சிக்கிமின் உயரமான பகுதிகளில் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 800 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர்.
திரிசக்தி கார்ப்ஸ் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகளை மீட்டனர். மீட்புப் பணிகள் இன்னும் தொடர்கின்றன, மேலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு தங்குமிடம், ஆடைகள், மருத்துவ உதவி மற்றும் சூடான உணவுகள் வழங்கப்பட்டன. சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக ராணுவ வீரர்கள் தங்களது முகாம்களை காலி செய்தனர்.
சீரற்ற காலநிலையில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான நடவடிக்கை நிவாரணத்தையும் ஆறுதலையும் ராணுவ வீரர்கள் அளித்தனர்.
இதற்கு ராணுவ வீரர்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.