தெலுங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் எம்எல்ஏவுமான மல்லா ரெட்டி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கனா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டம் கேசவரம் கிராமத்தில் 47 ஏக்கர் நிலத்தை மல்லா ரெட்டி தனது கூட்டாளிகளுடன் அபகரித்ததாக ஷமிர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேசவரம் கிராமத்தில் உள்ள 47 ஏக்கர் நிலம் தங்களின் பரம்பரை சொத்து எனவும், இந்த நிலம் கடந்த நவம்பர் 3ஆம் தேதி வேறு ஒருவர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதகாவும், புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களை தரக்குறைவாக பேசியதாகவும், எனவே வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக மல்லா ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சமீர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.