இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! - டாக்டர் ஜிதேந்திர சிங்
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பொருளாதாரத்தில் விண்வெளித்துறை ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று பிரதமர் அலுவலக பணியாளர், நலன் மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை,  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் நடப்பு நிதியாண்டில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீட்டை ஈர்த்துள்ளன என்று தேசிய தொலைக்காட்சி மாநாட்டில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இன்று சுமார் 8 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் 2040 ஆம் ஆண்டில் இது பன்மடங்கு பெருகும் என்பது இந்தியாவின் கணிப்பு. ஆனால் இன்னும்  சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சில சர்வதேச பார்வையாளர்களின் கூற்றுப்படி, எடுத்துக்காட்டாக, சமீபத்திய ஏ.டி.எல் (ஆர்தர் டி லிட்டில்) அறிக்கையின்படி 2040-க்குள் 100 பில்லியன் டாலர் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரோ இதுவரை 430 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 290 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாகவும், அமெரிக்க செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 170 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும் இஸ்ரோ வருவாய் ஈட்டியுள்ளது என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

வெறும் நான்கு ஆண்டுகளுக்குள், விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலிருந்து 1180 ஆக உயர்ந்துள்ளது. அதில் சில நிறுவனங்கள் லாபகரமான தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளன.

“தோல்வியுற்ற ரஷ்ய நிலவு திட்டத்திற்கு ரூ.16,000 கோடி   செலவானது.  சந்திரயான் -3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடி மட்டுமே செலவானது” என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த ஒன்பது   ஆண்டுகளில், குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் முன்னேறியுள்ளன, மேலும் அவை உலகெங்கிலும் பாராட்டப்படுகின்றன என்று கூறினார்.

Tags: ISROjitendra singh
ShareTweetSendShare
Previous Post

2029இல் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!

Next Post

ஜோதிமணி உட்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies