நடந்து வரும் நீண்ட தூர பயணத்தின் ஒரு பகுதியாக, ஐ.என்.எஸ் காட்மாட் டிசம்பர் 12 அன்று பிலிப்பைன்ஸின் மணிலாவை அடைந்ததுள்ளது.
இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது பாடசாலை மாணவர்களின் வருகைகள் மற்றும் சமூகத் தொடர்பு/ சமூகத் தாக்க செயற்பாடுகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மணிலாவில் இருந்து புறப்பட்ட பின், தென் சீனக் கடலில் ஐஎன்எஸ் காட்மாட் மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படையின் கடலோர ரோந்து கப்பலான பிஆர்பி ரமோன் அல்கராஸ் இடையே கடல்சார் கூட்டாண்மை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.என்.எஸ் காட்மாட் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் ஆகும், இது அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுத தொகுப்பைக் கொண்டுள்ளது.