ஆசியக் கோப்பை U-19 தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடவுள்ளது.
19 வயத்துக்குட்பட்டோர்கான 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் மொத்தமாக 8 அணிகள் பங்குபெறுகின்றன.
இந்த 8 அணிகளும் 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் ‘எ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், நேபால், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.
இந்த தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த அரையிறுதியில் மொத்தமாக 2 போட்டிகள் நடைபெறுகிறது. அதின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் விளையாடவுள்ளது.
இரண்டாம் அரையிறுதியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடவுள்ளது. இதில் வெற்றி பெரும் அணி மற்றொரு போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடவேண்டும்.
மேலும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.