மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக, நடிகர் ஷகீல் கான் உட்பட 4 பேருக்கு மும்பை சிறப்பு புலனாய்வுக் குழு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் ரூபாய் 15 ஆயிரம் கோடி அளவிற்கு சட்டவிரோத பந்தயம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை மும்பை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக, பாலிவுட் நடிகர் ஷகீல் கான், அவரது சகோதரர் சாம் கான், அமித் சர்மா மற்றும் ஹிதேஷ் குசலானி ஆகிய 4 பேருக்கு மும்பை சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியுள்ளது.
சூதாட்ட செயலி வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
முன்னதாக, மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், அமலாக்கத்துறை வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பாலை துபாய் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரவி உப்பாலை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.