தமிழ்ப் பேராயம் அமைப்பின் சார்பில் நடந்த தமிழ்ப் பேராய விருதுகள் வழங்கும் நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், புகழ்பெற்ற எஸ்ஆர்எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் அமைப்பின் சார்பில் நடந்த தமிழ்ப் பேராய விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமது சீரிய கல்விப் பணிகளைத் தொடர்ந்து வரும் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு @Paarivendharmp அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காக முன்னெடுத்துள்ள தமிழ்ப் பேராயம் அமைப்பு, கடந்த 12 ஆண்டுகளாக இந்த… pic.twitter.com/IZpf49jHxO
— K.Annamalai (@annamalai_k) December 15, 2023
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமது சீரிய கல்விப் பணிகளைத் தொடர்ந்து வரும் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய டாக்டர். பாரிவேந்தர் தமிழ் மொழி வளர்ச்சிக்காக முன்னெடுத்துள்ள தமிழ்ப் பேராயம் அமைப்பு, கடந்த 12 ஆண்டுகளாக இந்த தமிழ்ப் பணியை மேற்கொண்டு வருவது பெருமைக்குரியது. அவருக்கும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக குழுமத்தின் தலைவர் அண்ணன் ரவி பச்சமுத்து
அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வில், பாரிவேந்தர் பைந்தமிழ் விருது பெற்றுள்ள, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட, புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அம்மா அவர்களுக்கும், மற்றும் விருதுகள் பெற்றுள்ள அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.