பாகிஸ்தானில் இன்று காலை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இன்று காலை 9.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால், ஸ்வாட், மிங்கோரா, லோயர் பிர், அப்பர் டிர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
















