நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் நெரிசலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் “விமான நிலையத்தில் நெரிசல்” குறித்து செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜோதிராதித்ய சிந்தியா,
விமான நிலையத்தில் நெரிசலைக் குறைக்க மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) கூடுதல் மனிதவளப் பணியமர்த்தல் மற்றும் குடியேற்றப் பணியகத்தின் (BoI) பணியாளர்கள் மற்றும் புறப்படும் நுழைவுப் பாதைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
மெட்ரோ நகரங்கள் உட்பட 16 விமான நிலையங்களின் விவரங்களை அளித்தார். புறப்படும் நுழைவு பாதைகள் 213ல் இருந்து 312 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது கடந்த ஓராண்டில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள இந்த விமான நிலையங்களில் XIBS, X-ray இயந்திரங்களும் 234ல் இருந்து 312 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
நவம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை, பயணிகள் போக்குவரத்து 11.6 மில்லியனில் இருந்து 12.6 மில்லியனாக 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் டிஜி யாத்ரா (DigiYatra ) AAP இன் கீழ் 38 விமான நிலையங்கள் செயல்படுத்தப்படும், இது நாட்டின் 95 சதவீத பயணிகள் போக்குவரத்தை பூர்த்தி செய்யும் என்று கூறினார்.
இன்று டிஜி யாத்ரா 13 விமான நிலையங்களில் வேலை செய்கிறது, அவை நாட்டின் உள்நாட்டு பயணிகளின் திறனில் 85 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அமைச்சகம் எடுத்த திறம்பட நடவடிக்கைகளால், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு பெரிய விமான நிலையத்திலும் நெரிசல் ஏற்படவில்லை என்று கூறினார்.