டெல்லி விமான நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் முழு உடல் சோதனை கருவிகள் அமைக்கப்படும் என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்ளமைப்பு சிக்கல்களால் முழு உடல் பரிசோதனை கருவிகள் மற்றும் சிடிஎக்ஸ் ஸ்கேனர்களை விமான நிலையங்களில் அமைக்கும் காலக் கெடு நீடிக்கப்படுகிறது எனத் சிவில் விமான பாதுகாப்பு பணியக இயக்குநர் ஜெனரல் ஜுல்பிகர் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இவற்றை அமைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைகிறது, இந்நிலையில் தற்போது இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கணினி தளக்கதிர் படவியல் (டோமோகிராபி எக்ஸ்-ரே) தொழில்நுட்பக் கருவி (சிடிஎக்ஸ்) பயன்பாட்டில், விமான நிலையச் சோதனைகளில் பயணிகள் தங்கள் பைகளில் உள்ல எலெக்ட்ரானிக் பொருள்களை வெளியே எடுக்க வேண்டிய அவசியமிருக்காது.