அயோத்தி இராமர் கோவில் முதல் தள கட்டுமான பணிகள் குறித்த புகைப்படங்களை ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதற்காக அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கோயில் கட்டும் பணியை, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்த படங்கள், வீடியோ மற்றும் தகவல்களை அறக்கட்டளை பகிர்ந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமர் கோவிலின் முதல் தளம் கட்டுமான பணிகள் குறித்த புகைக்கபடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Shri Ram Janmabhoomi Mandir first floor – Construction Progress.
श्री राम जन्मभूमि मंदिर प्रथम तल – निर्माण की वर्तमान स्थिति pic.twitter.com/iYqveMeUcZ
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) December 15, 2023